இன்றைக்கு கார் எனபது வீட்டுக்கு வீடு முக்கியமான தேவையாகிவிட்டது.. ஒரு கார் ஏற்கனவே இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத்திய பின் மாற்றம் செய்வதும் அவசியமாகி விட்டது..
புதிதாக கார் வாங்கும் போது நமக்கு தோன்றும் முதல் சந்தேகம் பெட்ரோல் கார் வாங்கலாமா, டீசல் கார் வாங்கலாமா என்பது தான்..
எது சிக்கனம்?
என்னைப் பொறுத்த வரையில் இன்றை டீசல் மற்றும் பெட்ரோல் மார்க்கெட் விலையில் பெட்ரோல் காரே சிக்கனம் ..
ஏன், எப்படி என்பதை பற்றி பார்ப்போம்..
அது எப்படி?? டீசல் விலை பெட்ரோலை விட கம்மி , அதே சமயம் மைலேஜும் டீசலில் தான் அதிகம், அப்படியிருக்க டீசல் தானே சிக்கனம்?
ஆனால் அப்படியில்லை.. நாம் டீசல் அடிக்கும் போது மட்டும் விலையை கவனிப்பதால் தான் இப்படி தோன்றுகிறது.. அதே சமயம், டீசல் கார் வாங்கும் போது நாம் கொடுக்கும் அதிகப்படியான தொகையை முக்கியமாக கவனிக்க வேண்டும்..
உதாரணத்திற்கு , இன்றைக்கு பெரும்பாலானவர்கள் வாங்க ஆசைப்படும் மாருதி SWIFT காரை எடுத்துக்கொள்வோம்..
இதில் பல வெரைட்டிகள் இருக்கின்றன, அதில் நாம் VXI(petrol) , VDI(diesel) ஐ எடுத்துக்கொள்வோம்.
இரண்டுமே ஒரே கம்பெனி, ஒரே மாடல், ஒரே அம்சங்கள் கொண்டிருக்கின்றன.. பெட்ரோல் , டீசல் எஞ்சினை தவிர அனைத்துமே ஒன்று தான்..
இந்த காரின் on road விலைகளை பார்ப்போம்,
VXI (petrol) - rs. 5,85,000/-
VDI (diesel) - rs.7,16,000/-
இதன் விலை வித்தியாசம் ஒரு தோராயமாக பெட்ரோலை விட டீசல் 1,30,000/- அதிகம் வருகிறது..
சரி இருக்கட்டுமே, டீசல் விலை குறைவாக இருக்கும் போது, காரின் விலை அதிகம் வருவது சகஜம் தானே?
ஒவ்வொரு தடவையும் டீசல் அடிக்கும் போது நிம்மதியாக அடிக்கலாம் என்று தான் பெரும்பாலனவர்கள் நினைக்கின்றனர்.. ஆனால் அது பெரும்பாலும் தவறு..
தினமும் காரிலேயே ஒரு நாள் கூட குறையாமல் 75கி.மீ க்கும் மேல் பயனம் செய்பவர்களுக்கு வேண்டுமானால் டீசல் சிக்கனமாக இருக்கலாம், ஆனால் தினசரி 75 கி.மீ.க்கும் குறைவாக ஓட்டுபவர்களுக்கு அப்படி இல்லை..
அது எப்படி என்று பார்ப்போம்..
ஒரு காரை நாம் 5 வருடம் பயன்படுத்துகின்றோம் என்று வைத்துக்கொள்வோம்..
அந்த 5 வருடங்களுக்கு ஆகின்ற செலவுகளை பார்ப்போம்..
இந்த கணக்கு போடும் போது முதலில் நாம் சரியாக முடிவெடுக்க வேண்டியது, வருடத்திற்கு மொத்தமாக எவ்வளவு கி.மீ. வண்டியை ஓட்டுவோம் என்பது தான்..
ஒரு தடவை 1000 கி.மீ. யும் பல தடவை 50கி.மீ. யும் ஓட்டினாலும் சரி..
பெட்ரோல் கார்:
முதலில் பெட்ரோல் காருக்கு ஆகும் செலவை பார்ப்போம்,
இந்த பெட்ரோல் மாருதி swift காரை பொருத்தவரையில் சராசரியாக இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 16 k.m. கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.. கொஞ்சம் அதிகம் கிடைக்கலாம்..
இன்றைக்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 65 ரூபாய்..
நாம் ஒரு வருடத்திற்கு 10,000 கி.மீ. ஓட்டுவோம் என்று வைத்துக்கொள்வோம்..
அதாவது, மாதத்திற்கு 835 கி.மீ., தினமும் ஒரு நாள் கூட தவறாது எடுத்தால் 27 கி.மீ..
ஒரு வருடம் 10,000 கி.மீ. க்கு , இதன் மைலேஜ் லிட்டருக்கு 16 கி.மீ கிடைக்கும் என்றால்,
10,000 / 16 = 625லிட்டர்
10,000 கி.மீ.க்கு ஆகும் பெட்ரோல் அளவு = 625 லிட்டர்..
ஆக, 625 லிட்டர் பெட்ரோலின் விலை 625 * 65 = rs.40625 ஒரு வருடத்திற்கு ஆகின்றது..
பெட்ரோல், டீசல் விலை மாற்றத்தை சரியாக கனக்கிட முடியாது என்பதால் இன்றைய மார்க்கெட் விலையையே 5 வருடத்திற்கும் கணக்கிட்டுக் கொள்வோம்..
5வருடம் * ரூ. 40,625 = ரூ.2,03,125/- ( இதன் விலை மாற்றத்தால் வித்தியாசம் வரும் )
ஒரு தோராயமாக 5 வருடத்திற்கும் சேர்த்து ,50,000 கி.மீ க்கு ஓட்டினால் மொத்த பெட்ரோல் செலவு 2,03,125/- வருகின்றது
டீசல் கார்:
இந்த டீசல் மாருதி swift காரை பொருத்தவரையில் தோராயமாக(அதிகம்+குறைவு) சராசரியாக இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 20 k.m. கிடைக்கும்.. இது பெட்ரோல் மைலேஜை விட 4 கி.மீ. அதிகம்..
இன்றைக்கு டீசலின் விலை - 56 ரூபாய்
நாம் ஒரு வருடத்திற்கு 10,000 கி.மீ. ஓட்டுவோம் என்று வைத்துக்கொள்வோம்..அதாவது தினமும் ஒரு நாள் கூட தவறாது எடுத்தால் 27 கி.மீ..
ஒரு வருடம் 10,000 கி.மீ. க்கு , இதன் மைலேஜ் 20 கி.மீ என்றால்,
10,000கி.மீ. / 20 = 500 லிட்டர்
10,000கி.மீ க்கு ஆகும் டீசல் அளவு = 500 லிட்டர்
ஆக, 500 லிட்டர் பெட்ரோலின் விலை 500லிட்டர் * ரூ.56 = ரூ.28,000 ஒரு வருடத்திற்கு ஆகின்றது..
இதுவே 5 வருடம் , 50,000 கி.மீ என்றால் , டீசல் விலையை சரியாக கனக்கிட முடியாது என்பதால் இதையே வைத்துக்கொள்வோம்
5 வ்ருடம் * ரூ.28,000 = ரூ.1,40,000
ஒரு தோராயமாக 5 வருடத்திற்கும் சேர்த்து ,50,000 கி.மீ க்கு மொத்த டீசல் செலவு 1,40,000/- வருகின்றது
ஆக , 50,000 கி.மீ. க்கு ஆகின்ற செலவு,
பெட்ரோல் காருக்கு - ரூ.2,03,125,
டீசல் காருக்கு - ரூ.1,40,000
இதில் 5 வருடங்கள், 50,000 கி.மீ ஓட்டுவதால் டீசல் காரால் நாம் மிச்சப்படுத்தும் தொகை தோராயமாக ரூ.63,000/-
டீசல் கார் ஓட்டுவதால் 63,000/- ரூபாய் 5 வருடம் கழித்து தான் மீதியாகிறது இது சிக்கனம் தானே என்றால் அது கிடையாது..
ஏற்கனவே நாம் டீசல் கார் வாங்குவதால் 1,30,000/- ரூபாய் அதிகம் கொடுத்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்..
வட்டி மற்றும் சர்வீஸ்:
அது மட்டும் பார்க்க கூடாது, அந்த தொகையை நான் பேங்கில் போட்டாலே 5 வருடத்திற்கு 10% வட்டி வந்தாலே வருடம் 13,000 வீதம் 5 வருடத்திற்கு 65,000 ரூபாய் அதில் மட்டுமே பெட்ரோல் காரால் மிச்சம் கிடைக்கின்றது என்பதையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்..
அது போக , டீசலுக்கும் பெட்ரோலுக்கும் சர்வீஸ் செலவுகளில் கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகை மீதம் பன்னலாம்.அதே சமயம் டீசல் காரை விட பெட்ரோல் காருக்கு சர்வீஸ் குறைவான தடவை விட்டாலே போதும்..
ஒரு தோராயமாக வருடத்திற்கு 3000-4000 வரை டீசல் காருக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.. இது வண்டி ஓட்டுவதை பொருத்தும் மாறுபடும்..
இதனால் நமக்கு 5 வருடம் பெட்ரோல் காருக்கு சர்வீஸால் மீதம் ஆகும் தொகை கிட்டதட்ட ரூ.20,000/-
ஆக, பெட்ரோல் கார் வாங்குவதால் மொத்தம் நமக்கு வட்டி மற்றும் சர்வீஸினால் மட்டுமே நமக்கு மீதம் ஆகும் தொகை ரு.85,000/-
டீசல் காரால் நமக்கு மிச்சம் ஆகும் தொகையான 65,000 ஐ , பெட்ரோல் காரின் வட்டி மற்றும் சர்வீஸால் கிடைக்கும் தொகையை கழித்தால் கூட 20,000 மீதம்..
ஆக மொத்தம் நமக்கு பெட்ரோல் காரால் டீசல் காருடன் ஒப்பிடும் போது ஒட்டு மொத்தமாக ( வருடத்திற்கு 10,000 கி.மீ வீதம் 5 வருடத்திற்கு) மீதி ஆகும் தொகை 1,30,000+20,000 = 1,50,000/-
ரீ வேல்யூ:
இதில், பெட்ரோல் காரை விற்கும் போது ரீ வேல்யூ குறைந்தாலும் கூட நமக்கு அதிகபட்சம் நமக்கு 50,000 நஷ்டம் வந்தாலும் கூட (டீசல் காருடன் ஒப்பிடும் போது ) அப்பொழுது கூட நமக்கு 1 லட்சம் பெட்ரோல் காரினால் நமக்கு மீதி தான்..
வருடத்திற்கு 20,000 கி.மீ ஓட்டினால்:
இதே கணக்குப்படி வருடத்திற்கு 20,000 கி.மீ.ஓட்டுவோம் என்று வைத்துக்கொள்வோம்... 5 வருடத்திற்கு 1,00,000 கி.மீ வரை ஓட்டினாலும்( தினமும் 55 கி.மீ) டீசல் காரல் நமக்கு மிச்சம் ரூ.1,26,000/-
அப்பவும் கூட, நமக்கு 4,000/- ரூபாய் பெட்ரோல் காருக்கு விலை வித்தியாசத்தில் மிச்சம் + அத்துடன் ரூ.85,000 (வட்டி ,சர்வீஸ்களால் ) பெட்ரோல் கார்களால் மிச்சம் தான்..
பெட்ரோல் கார் நண்மைகள்:
அதே சமயம், நாம் வண்டி ஓட்டும் போது பெட்ரோல் கார்,டீசல் காரை விட சத்தம் குறைவாக இருக்கும், க்ளட்ச் டைட்டாக இருக்காது, வண்டி அதிராது , போன்ற பல நன்மைகள் இருக்கும் போது எதற்கு டீசல் கார் வாங்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..
இன்றை நிலவரப்படி டீசலுக்கும் , பெட்ரோலுக்கும் விலை வித்தியாசம் வெறும் 9 ரூபாய் மட்டுமே இருக்கின்றது..
டீசல் கார் தேவைகள்:
சரி, பின் எதற்கு டீசல் கார் ? அதில் நன்மையே இல்லையா?
-சராசரியாக தினமும் 100 கி.மீ க்கும் மேல் ஓட்டுபவர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் மிச்சம் தான் .. ஆனால் இன்றைய டீசல் விலை ஏற்றத்தாலும் , டீசல் - பெட்ரோல் கார் விலை வித்தியாசம் அதிகமாக இருப்பதாலும் பெரிய அளவு ஒன்றும் மீதம் இல்லை என்பதே எனது கருத்து..
- ஒரு சில கார் கம்பெனிகளின் பெட்ரோல் கார் மாடல்களின் திறன் மோசமாக இருக்கலாம் , அந்த மாதிரி சூழ்நிலைகளில் வேறு வழியில்லாமல் டீசல் கார் வாங்கலாம்..
- ஒரே மாடல் பெட்ரோல் - டீசல் கார் விலைகளில் வித்தியாசம் ரூ.50,000/- க்கும் குறைவாக இருந்தால் டீசல் காரை யோசிக்கலாம்..
அதனால் காரை வாங்கும் போது டீசல் கார் நமக்கு தேவை தானா என்று நன்றாக யோசித்து வாங்கவும்..
இது முழுக்க எனது சொந்த கருத்து, இது முன் பின் வித்தியாசப்படலாம்...