Tuesday, May 24, 2016

சிக்கிம் - வானமே இ(எ)ல்லை






சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா போக வேண்டுமென்பது பல வருட ஆசையாக இருந்து வந்தது.. ஏதோவொரு காரணாங்களால் தள்ளி போய் கொண்டே இருந்தது..

இந்த வருடம் கண்டிப்பாக போயே தீர வேண்டுமென்று முடிவெடுத்துகுடும்பத்துடன்நான் , மனைவி , மகன்கிளம்பினோம்..

 இது வரையில் சென்றிறாத கிழக்கு மண்டலம் , தெரியாத மொழி , புதிய இடம் போன்ற சின்ன சின்ன பயம் இருந்து வந்தாலும் என்ன ஆகி விடபோகிறது என்று ஒரு குருட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பயணத்தை தொடங்கினோம்..

முதலில் நாங்கள் கொல்கத்தா சென்றடைந்தோம் , பின்னர் அங்கிருந்து  நியூ ஜல்பைகுரி (சில்லிகுரிக்கு சென்றடைய ரயிலில் 11 மணி நேரம் பயணம் 

சில்லிகுரிக்கு செல்ல வேண்டுமென்றால் விமான நிலையமும்  உள்ளது. கொல்கத்தாவில் இருந்து  BAGDOGRA AIRPORT செல்லலாம்..

காலை 10 மணி அளவில் நியூ ஜல்பைகுரியை  நெருங்கும் போது சாரல் மழை எங்களை குளிருடன் வரவேற்றது.. 

சின்ன தடுமாற்றத்துடன் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.. 

ஒரு வழியாக அரைகுறை இந்தியில் கார் டிரைவரை கண்டுபிடித்து , பின்னர் அங்கிருந்து சிக்கிம் தலைநகரமான கேங்க்டாக் ற்கு xylo வில் 130 கிமி பயணத்தை தொடங்கினோம் .. 

இந்த ஊர் ( சில்லிகுரி / ஜல்பைகுரி ) ,நம்ம ஊர் மேட்டுப்பாளையம் போல் அங்கிருக்கும் மலைகளான டார்ஜிலிங் , களிம்போங்குர்சியேங் போன்ற சுற்றுலா இடங்களின்   அடிவாரம்.. 


இங்கிருந்து இந்த இடங்களுக்கு போக வேண்டுமென்றால் பஸ் போக்குவரத்து எதுவும் இருப்பதாக தெரியவில்லை..


shared taxi அல்லது தனியார் வண்டிகள் தான் வழி.. இது ரயில் நிலையத்திற்கு வெளியே வந்தவுடன் நம் விருப்பத்திற்கேற்ப mahindra maxx , xylo , tata sumo , toyota innova கிடைக்கின்றது..

bacherlor ஆக சென்றால் shared taxi ஓ.கே பட்ஜெட்டும் மிக குறைவு.. மற்றபடி தனியார் வண்டி தான் பரவாயில்லை..

 ஊர் சற்றே பெரிய நகரம் தான்.. இது பெங்கால் மாநிலத்தின் முக்கிய பெரிய ஊராகும்..

சிறிது தூரத்திற்கு( 25கி.மீ)  போகிற வழியெல்லாம் MILITARY TRAINING CAMP  இருந்தது.. ரோடும் அருமை.. 
பின்னர் கிட்டதட்ட 100 கி.மீவரையில் மலை பகுதியில் பயணம்.. 
கூடவே அழகான,சுத்தமான டீஸ்டா நதியும்.. 
முதல் 50 கி.மீ வரையில் நார்த் பெங்கால்..
பின்னர் டார்ஜிலிங் மாவட்டம்..



GANGTOK:


GANGTOK , சிறிய மாநிலமான சிக்கிம்மின் தலைநகரம்..

அருமையான ரோடுகள் , முறையான நடைபாதைகள் , வண்ணமயமான சுவர்கள்,  வித்தியசாமான வட கிழக்கு மக்கள் என  GANGTOK  நகரம் எங்களை வரவேற்றது.. 

சாரல் மழையும் பொழியவே ,  அந்த ஊருக்கு மேலும் அழகு சேர்த்தது.. 

GANGTOK  நகரை பொருத்த வரையில்  வட கிழக்கு மாநிலங்களில் ஒரு பெரு மலை நகரம் என்று சொல்லலாம்.


இது ஊட்டியை விட சற்று பெரிதாக இருக்கின்றது..இதன் அழகான ரோடுகளும் , திபெத்தியர்களின் வடிவமைப்புகளில் உள்ள கட்டிடங்கள் , கண்டிப்பாக நம்மை கவரும் என்பதில் சந்தேகமில்லை..

இங்கே திபெத்தியர்கள்( , லெப்சாக்கள் (LEPCHAS ) , பூட்டியாக்கள் (bhutias) , நேபாளிகள் என்று கலவையான மக்கள் வசிக்கின்றனர்.. 
இவர்கள் பெரும்பாலோனோர்கள் சீனா எல்லை போர் சமயங்களில் இங்கே வந்த அகதிகள் ஆவார்கள்..

சிக்கிம்மை அங்கிருக்கும் பெரும்பாலான மக்கள் ஒரு சுத்தமான ஊராக வைத்திருக்கவே மிகவும் விரும்புகிறார்கள்..

பொது இடங்களில் ப்ளாஸ்டிக் பாட்டில்கள்,கவர்கள் வெளியே வீசக்கூடாது , 
பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக்கூடாது , வெளி இடங்களில் கழிப்பிடங்களை பயன்படுத்துவது ,தேவையில்லாமல் ஹார்ன் அடிப்பதுபாதுக்காப்பான பயணம், TRAFFIC  விதிமுறைகள் போன்ற கெடுபிடிகள்  வெறும் சம்பிரதாய சட்ட அளவில் மட்டும்  இல்லாமல் ,  முடிந்த வரையில் கடை பிடிக்கின்றனர்.. 














































































இவற்றை நாங்களும் நேரில் பார்த்த வரையில் கண்ட இடங்களில் குப்பைகளை பார்க்கவில்லை.. 

ஒரு முறை போகும் வழியில், கழிப்பிடத்தை பயன்படுத்தாமல் பொது இடத்தை பயன்படுத்தியதற்காக  ஒருவரிடம் நன்றாக வாங்கி கட்டினேன் , சிக்கிம் என்ன குப்பை தொட்டியா என்று கண்டபடி திட்டினார்.. 

மேலும் , நாங்கள் காரில் சென்ற போது ட்ரைவர் ஆங்காங்கே தெரிந்த இடங்களில் டாய்லெட் இருக்கும் இடமாக பார்த்து நிறுத்தினார்.. 

அதே சமயம் எங்களை குப்பைகளை வெளியே ரோடுகளில் போட அனுமதிக்க வில்லை.. அவரே காரில் ஒரு மினி குப்பை தொட்டி வைத்திருந்தார் அதில் போட சொன்னது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது..

பயணத்தின் போது அடிக்கடி ஆங்காங்கே செக் போஸ்ட்ல் நிறுத்தி விசாரிக்கின்றனர்.. வண்டியை நிறுத்தி டிரைவர் ஒழுங்காக வண்டி ஓட்டுகிறாரா அல்லது வேகமாக ஓட்டுகிறாரா என்று எங்களை கேட்டதும் ஒரு பாதுகாப்பு உணர்வை தந்தது..

இவற்றையும் மீறி சிற்சில இடங்களில் மட்டும், பொது இடங்களில் சில மீறல்கள் கண்டோம் ஆனால் மற்ற ஊர்களை ஒப்பிடும் போது மிக மிக குறைவே.. 

GANGTOK ல் மட்டுமே சுற்றி பார்ப்பதற்கு பல இடங்கள் இருந்தன..ஆனால் எங்களுக்கு சம்பிரதாய HOT SPOT
 இடங்களை பார்க்க பெரிதாக  விருப்பமில்லாததால் அதிகம் சுற்றவில்லை.. 

இருந்தாலும் ஒரு சில இடங்களை மட்டுமே நடந்து சென்று பார்க்க விரும்பினோம்..


அதில் ஒன்று M.G. MARG என்ற அங்காடி தெரு.. 


































































இந்த தெருவில் என்ன சிறப்பு என்றால் , இந்த ரோட்டில் எந்த வண்டியும் உள்ளே அனுமதியில்லை.. ஓரளவிற்கு பெரிய அகலமான தெரு 

இருபுறமும் ஷாப்பிங் செய்யலாம்.. சுருக்கமாக இது ஒரு திறந்த வெளி ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் எனலாம்.. 


இங்கே காலையிலேயே பல மக்கள் வந்து விடுகின்றனர்..நடுவில் ஆங்காங்கே பெரிய இருக்கைகள் , பூங்தொட்டிகள் வைத்துள்ளார்கள்.. 

இங்கே தார் ரோடுகளுக்கு பதிலாக அழகான கற்களை பதித்துள்னர்.. 

இங்கே சில நல்ல தரமான ஹோட்டல்கள் , பேக்கரிகள் , போன்ற பல கடைகள் உள்ளன..

ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற இடம்..

BACKERSCAFE என்ற கடையில் அங்கே சிறப்பு வாய்ந்த வெரைட்டியான  MUFFIN கேக் சாப்பிட்டதை மறக்க இயலாது..


 விலையும் மிக நியாயமாக இருந்தது..சுவையும் மிக அருமை..கண்டிப்பாக சாப்பிடவேண்டிய இடம்.






இங்கே ரோட்டில் அமர்ந்து கொண்டு நேரத்தை கடத்துவது அருமையாக இருந்தது.. 

இங்கே மட்டுமில்லை அருகில் சில ஊர்களில் ஆற்றங்கரையில் ஒட்டியிருக்கும் பாதையில் அமர்ந்து கொண்டு ஆற்றை ரசிக்க இருக்கைகள் அமைத்திருக்கின்றார்கள்..


முதல் நாளில் மழையை ரசித்தபடியே ஆரம்ப்பிதோம்..


பின்னர் அதன் தொடர்ச்சியை பார்க்கும் போது அடுத்த நாள் பயணத்திற்கு ஏதாவது வேட்டு வைத்து விடுமோ என்று கொஞ்சம் பயம் கிளம்பியது.. கரண்ட்டும் கட் ஆகி விடவே பயத்துடனே உறங்கினோம்.. 

அடுத்த நாள் விடிந்ததும் பார்த்தால் மழை விட்டிருந்தது.. அப்பாடா என்று ரோட்டை பார்த்தால் ஒருவரையும் காணவில்லை.. என்னடா என்று பார்த்தால் நேரம் 5 தான் ஆகி இருந்தது.. இங்கே வெகு சீக்கிரம் விடிந்திருந்தது.. 5 மணி என்பது 6-7 மணி போல் இருந்தது புது அனுபவம்..


சிக்கிமை நான்கு பிரிவுகளாக சுற்றி பார்க்கலாம்.

NORTH , SOUTH , EAST , WEST..

நாங்கள் NORTH மற்றும் EAST சிக்கிமை மட்டும் செல்ல முடிவெடுத்திருந்தோம்..


FLOWER EXHIBITION CENTER:



காலையில் 10 மணிக்கு NORTH SIKKIM பயணம் என முடிவெடுத்தோம்.. 


நேரம் கொஞ்சம் இருந்ததால் ஓரு இடமாவாது அந்த ஊரில்  பார்த்து விட வேண்டுமென்று அருகில் உள்ள 

FLOWER EXHIBITON CENTER க்கு நடந்து சென்று பார்த்தோம்..

காலையில் 9 மணிக்கே திறந்து விடுகிறார்கள்.. 

அங்கே நம்ம ஊர் ஊட்டி மலர் கண்காட்சி போல் பொது மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்கள்.. ஆனால் , ஊட்டியை போல் பெரிது இல்லையென்றாலும் நன்றாக இருந்தது..குறை ஒன்றும் கூறுவதற்கில்லை..
































இங்கே சிறிது நேரம் சுற்றி விட்டு பின்னர் north sikkim கிளம்பினோம்




NORTH SIKKIM: 


             
 
NORTH SIKKIM     பொறுத்தவரையில் சிக்கிம்  மாநில சுற்றுலாவுக்கு மிக முக்கிய இடமாகும்.. 



கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடங்களில் இருக்கும் அழகான , வண்ணமயமான மரங்கள் நிறைந்த மலைகள்
பள்ளதாக்குகள் சுத்தமான வெள்ளை நிறத்தில் பாயும் நதிகள் , சுவர் போல் மிக அருகில் இருக்கும் வின்னைதொடும் பனிமலைகள்,  நீர்வீழ்ச்சிகள் என  நிறைந்து இருக்கின்றன..


இரட்டை பூட்டியா கிரமாமான LACHEN  மற்றும் LACHUNG என்ற கிராமம் தான் 
NORTH SIKKIM ன் இரு கோட்டைகளாகும்.. 

இங்கே செல்ல வேண்டும் என்றால் இந்தியர் என்றாலும் கூட INNER LINE PERMIT வாங்கி கொண்டு தான் செல்ல வேண்டும்.. வெளிநாட்டினர் யாருக்கும் இங்கே செல்ல அனுமதி இல்லை.. 

அதை நாமே நேரில் எளிதாக GANGTOK ல் வாங்கிக்கொள்ளலாம்.. 

கூட்டத்தை பொறுத்து உடனடியாகவோ , அரை நாள் வரையிலோ பெர்மிட் கிடைக்க நேரம் பிடிக்கும்..

ட்ராவல் ஏஜெண்டிடம் முன்னமே கூறிவிட்டால் நமக்கு வேலை இல்லை.. உரிய டாக்குமெண்ட்ஸ் (any photo id) மட்டும் கொடுத்தால் போதுமானது.. 

நாம் நேரில் போக தேவையில்லை.உடனடியாகவும் கிடைத்து விடுகின்றது..

NORTH SIKKIM ற்கு போக வேண்டுமென்றால் TRAVEL AGENT மூலமாக செல்வதே சிறந்தது.. 

ஏனென்றால் அங்கே தங்குவதற்கு என்று பெரிய ஹோட்டல்கள் ஏதும் கிடையாது.. அங்கே வசிக்கும் மக்கள் அவரவர் வீடுகளிலேயே ரூம்களை அமைத்து டூரிஸ்ட்களுக்கு வாடகைக்கு விடுகின்றனர் அங்கேயே சாப்பாடும் கொடுத்து விடுகின்றனர்.

நாமே நேரில் தொடர்பு கொண்டாலும் அங்கே travel agent களுக்கு தான் முன்னுரிமை என்பதால் அவர்கள் மூலமாக செல்வதே சிறந்தது..

பெரும்பாலான travel agent கள் fixed trip package ஆக north sikkim ற்கு கூட்டி செல்கிறார்கள்.. 
1 night/ 2 days , 2nights / 3 days , 3 nights / 4 days, ஒரு வாரம் டூர் என்று பல விதங்களில் அங்கு சென்று வரலாம்.. 

நாங்கள் 2 nights/ 3 days  தேர்ந்தெடுத்திருந்தோம்..

 NORTH SIKKIM  ல் சுற்றி பார்ப்பதற்கு சில முக்கிய இடங்கள் இருக்கின்றன..  
அவற்றிற்க்கு செல்ல வேண்டுமென்றால் தலா  இரண்டு இடங்களுக்கு சென்று தங்கிவிட்டு தான் செல்ல முடியும்

1. LACHEN  - இங்கிருந்து  thangu tsopta valley  வழியாக GURUDONGAR LAKE ,ஆகிய இடங்களுக்கு செல்லலாம்..

2. LACHUNG இங்கிருந்து yumthang valley , shinga rhododenderon santuary , zero point ஆகிய இடங்களுக்கு செல்லலாம்

முதலில் நாங்கள் GURUDONGAR LAKE  செல்ல முடிவெடுத்து lachen ற்கு கிளம்பினோம்.. ..




LACHEN:


இது gangtok ல் இருந்து கிட்டதட்ட 125 கி.மீவரும்.. 

gurudongmar lake ற்கு  ஒரே நாளில் செல்ல முடியாதென்பதாலும் , இங்கே தங்கும் வசதி ஏதும் இல்லையென்பதாலும்  வழியில் இருக்கும் LACHEN என்ற மலை கிராமத்தில் தான் தங்க முடியும்.. இங்கே தங்கி விட்டு அடுத்த நாள் தான் செல்ல வேண்டும்.. 

நாங்கள் காலை 10.30 அளவில் கேங்க்டாக்லிருந்து lachen கிளம்பினோம்.. மழையும் கொஞ்சமாக பெய்ய ஆரம்பித்தது.. 

இங்கிருந்து தான் அழகான சிக்கிம் ஆரம்பித்தது.. 
போகிற வழியெங்கும் டீஸ்டா நதியின் அழகும் , பல பள்ளதாக்குகளும் , மழையினால் திடீரென தோன்றிய பல அருவிகளும் மனதை கொள்ளை அடித்தன.. 
வெயில் இல்லாத்தால் மலைகள் மேக மூட்டத்துடன் மென்மேலும் அழகாக இருந்தது..

ஆங்காங்கே சில குட்டி நில சரிவுகள் இருந்ததுஆனால் போகிற வழியெங்கும் ஆங்காங்கே  BRO அதை உடனடியாக சரி செய்யகின்றனர்..



ரோடுகளை பொருத்த வரையில் மழை அதிகம் பெய்யும் இடமென்பதால் அதற்கு தகுதாற்போலே உள்ளது.. ஆனால் எதுவும் மோசம் என்று கூற முடியாது..













































































































மாலை 5 மணி அளவில்  LACHEN  (9500 அடி உயரத்தில் உள்ள கிராமம்)  சென்றடைந்தோம்..

lachen கிராமம் 2011 முன்பு வரையில் பார்ப்பதற்கு ஒரு குட்டி ஸ்விஸ் கிராமம் போன்ற அழகை கொண்டிருந்ததாக கூறுகிறார்கள்.. 
ஆனால்,2011 -2012 ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பெரிதும் பாதிப்படைந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டிருக்கிறார்கள்..

நாலா பக்கமும் சுற்றிலும் வானுயர்ந்த மலைகள் அதற்கும் மேல் வெள்ளை தொப்பி அனிந்தது போல்தெரியும் பனி மலைகள் என இந்த் ஊர் மிக அழகாக இருந்தது.. சுற்றியும் சுவர் எழுப்பியது போல் மலைகள் இருந்தது அழகு..

அப்படியே நடையாக இக்கிராமத்தை சுற்றி வந்தோம்.. கொஞ்சம் கூட சத்தமில்லாத ஊர் திபெத்தியர்களின் வடிவமைப்பில் உள்ள சிறு வீடுகள் என அந்த ஊரை சுற்றி வந்தோம்.. சிறிது நேரத்தில் இருட்டி விடவே ரூமிற்கு வந்தோம்..















































15 நாள் GREEN LAKE TREK என்ற இடத்திற்கு சென்று வர இந்த இடம் தான் starting point என்பதும் இந்த ஊர் சிறப்பு..




GURUDONGMAR LAKE :



gurudongmar lake 18000 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் நமது உடம்பு அதன் சீதேஸ்ன நிலைக்கு கண்டிபாக பழக்கப்படவேண்டும்.. அதனால் lachenல் தங்கி ஒரு நாள் உடம்பிற்கு சீதேஷ்ன நிலை பழகிவிட்டு அடுத்த நாள் செல்வதே சரியானதாக இருக்கும்.

gurudongmar lake  லாச்சனில் இருந்து 75 கி.மீ தொலைவில் இருக்கின்றது..ரோடும் மோசமென்பதாலும் உயரமான இடத்தில் இருப்பதாலும் உடனடியாக திரும்ப வேண்டும் என்பதாலும் காலை 4 மனிக்கு பயணத்தை தொடங்க வேண்டும் என கூறினார்கள்.. 

மேலும் அங்கே 10-11 மணிக்கும் மேல் காற்று வேகமாக அடிக்க ஆரம்பித்து விடும்.. அந்த காற்றில் oxygen மிக குறைவாக இருக்கும் என்பதால் நம்மால் அதனை சமாளிக்க முடியாது.. மூச்சும் தினறும் என்று கூறினார்கள்..

அதனால் , மறு நாள் காலை 4 மணிக்கே பயனத்தை தொடங்கினோம்.. தங்குமிடத்தில் காலை 3.45 மணிக்கே எங்களுக்கு டீ வைத்து கொடுத்தார்கள்..

கூட 4-5 கார்களில் வேறு சில பயணிகளும் தொடர்ந்து வந்தார்கள்.. நன்றாக குளிர் இருந்தது..
அதிகாலையில் 4.30 மணியளவில் பயணம் தொடங்க இருளும் கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கியது..































40 கி.மீபயனத்திற்கு பிறகு ஆர்மி செக்போஸ்ட் thangu என்ற இடத்தில் நிறுத்தினார்கள்.. செக்போஸ்டில் இருந்து 8 வயதிற்கு கீழும் - 60 வயதிற்கு மேலும் இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் விசாரிக்கின்றார்கள்.. 



இங்கே காலை உணவிற்காகவும் , மீண்டும் நமது உடம்பு சீதேஸ்ன நிலைக்கு பழக்கப்படவேண்டுமென்பதால் அங்கிருக்கும் கடைகளில் நிறுத்துகின்றார்கள்.. அங்கே சிக்கிமின் special உணவான MOMO , NOODLES , TEA , TOASTED BREAD ஆகியவைகள் கிடைக்கின்றன..


இந்த இடத்தை சுற்றி tsopta valley என்ற இடம் அழகாக இருந்தது.. போகிற வழியிலேயே இருந்ததால் இங்கு செல்வதில் பிரச்சனை இல்லை..

இந்த இடம் சுற்றிலும் பள்ளதாக்கு மற்றும் ஆர்மி வசிக்கும் இடமாகும்.. இங்கே ஒரு சில தங்குமிடங்களும் இருந்தது.. ஆனால் மிக சிறிய ஊர்..

மீண்டும் பயணம் தொடங்கினோம்.. மேலும் 10-15 கி.மீ மோசமான ரோடுகளின் இடையே பயணம் பின்பு கடைசி 15-20கி.மீ அருமையான plain ரோடுகளில் பயணம்.. 





போகிற வழியெங்கும் ராணுவ வீரர்களின் தங்குமிடம் ( military deployment) இருந்தன..




























ரோடுகளை பொருத்த வரையில் உயரமாக வளைந்து வளைந்து மிகவும் மோசம்.. இடுப்பு வலி கழுத்து வலி உறுதிஆனால் போக போக சுற்றிலும் உள்ள விதவிதமான வித்தியாசமான வானுயர்ந்த பனிமலைகளில் அழகு அதனையெல்லாம் மறக்கடித்தது..

எந்த பக்கம் பார்பது என்றே புரியவில்லை சுற்றிலும் அழகான மலைகள்.. பள்ளதாக்குகள்..
































































 பின்னர் 9-30- 10 மனி அளவில் Gurudongmar lake குரு லேக் வந்தடைந்தோம்..

காரை விட்டு இறங்கியவுடன் அவர்கள் சொன்னபடியே காற்று சற்று கேகமாக வீசியது.. நன்றாக குளிரும் அடித்தது..  oxygen மிக குறைவு என்பதால் நடக்க நடக்க சற்று நேரத்தில் மூச்சு  லேசாக தினறியது..

Gurudongmar Lake உலகின் அதிக உயரமான இடங்களில் இருக்கும் ஒரு ஏரி...

சுற்றிலும் வெள்ளை பனி மலைகள் பனிக்கட்டியாக உறைந்திருந்த ஏரி நீர் அடர் நீல நிறத்தில் அழகாக இருந்தது.. 

இந்த ஏரி புத்த மதத்தினரும்சீக்கிய மதத்தினரும் புனித ஸ்தலமாக வழிபடுகின்றனர்..







































































  சுற்றிலும் நடந்து வர பாதை அமைத்திருக்கிறார்கள்..நாங்களும் முடிந்த வரையில் நடந்து சென்றோம்.. நடக்க நடக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது.. எனது மகனுக்கு தலைவலி வந்து அங்கேயே அமர்ந்து விட்டான்..

மேலும்  11 மணிக்கும் மேல் முடிந்த வரையில் யாரையும் இருக்க வேண்டாம் என சொல்லிவிடுகிறார்கள்..

இங்கே winter லிம் செல்லலாம்அப்பொழுது இன்னமும் அழகாக இருப்பதாக கூறினார்கள்.. ஏப்ரலிலேயே இந்த குளிர் அடிக்குதுபனிகளும் நிறையவே இருந்தது..வின்டரில் கண்டிப்பாக குடும்பத்துடன் சிரமம் தான்..

நாங்களும் ஒரு மனி நேரம் வரையில் அங்கேயே சுற்றி சுற்றி வந்தோம்.. பின்னர் கொஞ்சம் சோர்வாகவே அங்கிருந்து கிளம்ப முடிவெடுத்தோம்..

திரும்பும் வழியில் அங்கே  திபெத்திய எல்லை முழுக்க ஆங்காங்கே தயார் நிலையில் டாங்கிகள் பார்த்தோம்..

மதியம் 2 மனிக்கு மீண்டும் lachen வந்து சேர்ந்தோம்..

 மதிய உணவிற்கு பின்  North Sikkim ன் மற்றொரு முக்கிய கிரமமான  Lachung ற்கு  பயணத்தை தொடங்கினோம்..




LACHUNG : 




lachen லிருந்து கிட்டதட்ட 40-50கிமீ பயணம்.. மாலை 5 மணிக்கு  Lachung வந்து சேர்ந்தோம்..

இந்த கிராமம்  Lachen  விட சற்று  வளர்ச்சியடந்த கிராமமாக இருந்தது.. இதுவும் திபெத்திய பார்டரிலிருந்து 15-20 கிமீ அருகில் அமைந்திருக்கின்றது..

பள்ளதாக்கில்  நடுமே பாயும் ஆறு  அதன் இரு பக்கமும் கிராமம், என இந்த இடமும் மிக அழகாக இருந்தது.. இங்கே வருகிற வழியில் விவசாயத்தை பார்க்க முடிந்தது..  இங்கே செல்ல ரோடுகள் கொஞ்சம் நன்றாக இருந்ததுசிரமமும் ஏதும்  இல்லை..


இந்த ஊரும் கிராமம் என்பதால் டிராவல் ஏஜெண்ட் ஏற்பாடு செய்திருந்த இடத்தில் தான் தங்கினோம்.. நன்றாகவே இருந்தது..



































இங்கே மறுபுறம் ஆற்றை கடந்து சென்றால் ஒரு புத்த மடம் இருக்கின்றது.. ஆனால் மாலை நேரமாகிவிட்டதால் அங்கே செல்லவில்லை..

அடுத்த நாள் காலையில் இருந்து மூன்று இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால், மீண்டும் நேரமாகவே கிளம்ப வேண்டும்.. மூன்று இடங்களும் அருகில் இருப்பதால் இம்முறை 6 மணிக்கு கிளம்பினோம்..






SHINGBA RHODODENDERON SANCTUARY,  YUMTHANG VALLEY  மற்றும்  ZERO POINT.


lachung 
ல் இருந்து  50 கி.மீ அளவில இந்த இடங்கள் முறையே வரிசையாக வழியிலேயே இருக்கின்றது..

இங்கே சிறப்பு என்ன்வென்றால் போகிற வழியெங்கும் rhododenderon பூக்கள் நிறைந்த செடிகளை ஆயிரக்கணக்கில் சில வண்ணங்களில் காணலாம்.. 

இதற்கென்று ஒரு பூக்கள் சரணாலயம் ஒன்று அமைத்திருக்கின்றார்கள்.. shingba rhododenderon sanctuary..



SHINGBA RHODODENDERON SANCTUARY :


இதற்கென்று தனியாக போக தேவையில்லை .. இது yumthang valley , zero point  போகும் வழியேலேயே இருக்கின்றது..

இந்த Rhododenderon பூக்கள் ஏப்ரல் ,  மே மாதம் மட்டுமே பூக்கும்.. 

நாங்கள் ஏப்ரல் மாதம் சென்றதால் இந்த பூக்களை கண்டோம்..ஆனால் எதிர்பார்த்த அளவு இல்லாமல் பல இடங்களில் வெறும் செடிகளை மட்டுமே கண்டோம்.. இதனால் சற்று ஏமாற்றம் அடைந்தோம்..

இப்பூக்கள் பெரும்பாலும் அடர் சிவப்பு வண்ணத்தில் இருந்த்து.. அது போக ஊதா , மஞ்சள் மற்றும் pink நிறங்களிலும் கண்டோம்..

மேலும் இங்கே இருக்கும் பாறைகள் பல இடங்களில் வண்ணமயமாக இருந்தது அழகு..

































































YUMTHANG VALLEY :


கரடுமுரடான பெரிய கற்கள் , பாறைகள் நிறைந்த ஆனால் பார்ப்பதற்கு அழகான ரோடுகளை தாண்டி  yumthang valley வந்தடைந்தோம்.. 



இது
 சுற்றிலும் பனி மலைகள் கொண்ட அழகான  பூக்கள் நிறைந்த ஒரு பள்ளதாக்கு ஆகும்..


நடுவில் சிறு ஆறு ஒன்றும் ஓடுவது இதன் அழகை மேலும் அழகூட்டுகின்றது..

அதே சமயம் இந்த பள்ளதாக்கை சுற்றிலும் ஊதா நிறத்தில் ஒரு குட்டி பூ  லட்சக்கணக்கில் காண்பது மிக அழகாக இருந்த்து.. 

இந்த பூ அங்கு மட்டும் இல்லாமல் போகிற வழியெங்கும் பாதையின் ஓரத்தில் இருந்தது அழகு..

yumthang valley ல் இருந்து தான் zero point ற்கு செல்ல வேண்டும்.. 

இங்கே பனி அதிகம் இருக்கும் என்பதால் ,zero point ற்கு செல்வதற்கு தேவையான பொருட்களை ( கை உறை , ஷூக்கள் , ஜெர்க்கின் yumthang valley ல் இருந்து தான் வாடகைக்கு எடுத்து செல்ல முடியும்.. இதற்காகவே கிட்டதட்ட 70-80 கடைகள் வைத்திருக்கின்றார்கள்..

இதற்கென தலைக்கு 150 ரூபாய் முதல் வாடகை வாங்குகிறார்கள்..


























































தொடர்ந்து zero point ற்கு 20 கி.மீபயணம் செய்தோம்..

இந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் இதெற்கென  காருக்கு ட்ரைவரிடம் தனியாக வாடகை தரவேண்டும்..  வண்டிக்கு ஏற்றார் போல் ரூ.2500/- முதல் வாங்குகிறார்கள்..

yumthang valley யில் இருந்து zero point ற்கு உயரமான மலையில் பயணம் என்பதால் ,செல்லும் வழியெங்கும் பள்ளதாக்குகள் ஏராளம்.. அவை அனைத்தும் மிக அருமை.. 


ZERO POINT செல்லும் வழி :




































































பனிமூட்டமும் சேர்ந்து கொள்ள மலைகள் அனைத்தும் மேலும் அழகாக இருந்த்து..




ZERO POINT :



Zero point என்பது இதற்கு மேல் எந்த இடமும் இல்லை , இது தான் கடைசி point என்பதை குறிப்பதற்காக பெயர் அமைந்துள்ளது.. இது திபெத் பார்டர்  மிக அருகே இருக்கும் ஒரு பனி பள்ளத்தாக்கு ஆகும்..

இங்கே மிக அருகிலேயே பனிகள் கொட்டிக்கிடந்தன.. இங்கே பல சுற்றுலா பயணிகள்  பனியில் விளையாடலாம்.. ஆனால் ஹிமாச்சலில் இருப்பது போன்று ice sports என்று எதுவும் கிடையாது.. 

காரை விட்டு இறங்கியதும் எங்களால் குளிர் தாங்க முடியவில்லை..

ஒரு வழியாக கொஞ்ச தூரம் ரோபோ மாதிரி நடந்தோம்.. பனி மழையும் லேசாக பொழிய தொடங்கியதும் இன்னும் குளிர் அதிகமானது..

அப்படியே ஒரு இடத்தில் ரோபோ மாதிரி நின்று கொண்டிருந்தோம்.. 

காலையில் சாப்பிடாததால் லேசாக பசிக்கவே, பின்னர் அங்கிருக்கும் தள்ளு வண்டி கடைக்கு சென்றோம்.. 

அங்கே சென்றதும் கடைகாரம்மா பீர் , விஸ்கி , ரம் எது வேண்டும் என்று கேட்கவே எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது..

சுண்டல் , மேகி நூடுல்ஸ் பாப்கார்ன் வாங்கி சாப்பிட்டோம்.. குளிருக்கும், பசிக்கும் அது தேவாமிர்தமாக இருந்தது.. 













அப்படியே கொஞ்ச நேரம் மலைகளின் அழகை ரசித்து கொண்டிருந்த போது பனி காற்று பலமாக வீசவே , கடைகளை மூட தொடங்கினர்.. நாங்களும் கிளம்பினோம்..

இங்கே 10 -11 மனிக்கு மேல் யாரும் இருப்பது போல தெரியவில்லை.. அனைவரும் lachung கிளம்பி விடுகின்றனர்..

மீண்டும் அதே வழியில் lachung திரும்பினோம்.. 

மதியம் அங்கேயே சாப்பிட்டு விட்டு மீண்டும் கேங்க்டாக்ற்கு திரும்ப பயனித்தோம்..


மீண்டும் GANGTOK:


கிட்ட்தட்ட 4 மனி நேர பயணத்திற்கு பிறகு கேங்க்டாக்ற்கு இரவு வந்தடைந்தோம்.

ரொம்பவும் டயர்டாக இருந்த்தால் அடுத்த நாள்  எங்கேயும் மீண்டும் பயணம் வேண்டாம் என்று முடிவெடுத்து  மறு நாள் கேங்க்டாகிலேயே ரெஸ்ட்.. 

இன்று முழுவதும் மீண்டும் gangtok ல் MG road ல் மட்டும் சுற்றினோம்.. 



EAST SIKKIM :

அடுத்த நாள் EAST SIKKIM செல்ல முடிவெடுத்தோம்.. 

இதுவும் மிலிட்டரி deployment என்பதால் இங்கே செல்லவும் permit வேண்டும்.. இங்கேயும் வெளிநாட்டினர் யாருக்கும் அனுமதி இல்லை..

TSOMGO LAKE , NATHULA PASS வழியாக ZULUK ( ஜலுக் ) என்கிற மலை கிராமத்திற்கு செல்ல முடிவெடுத்தோம்.. 


TSOMGO LAKE or CHANGU LAKE:


அடுத்த நாள் காலையில் 9 மனி அளவில் கேங்க்டாக்கிலிருந்து முதலில் tsomgo lake கிளம்பினோம்..  இது கேங்க்டாகிலிருந்து 35 -40 கி.மி வருகின்றது.. 

மீண்டும் மலைகளின் வழியாக பயணம்.. ரோடுகள் north sikkim  போல் இல்லாமல் இங்கே alto கார் கூட செல்லும் அளவிற்கு சற்று நன்றாக இருந்தது.. 






































TSOMGO LAKE அமைந்திருக்கும் இடம் இந்தியா - சீனா பார்டர் என்பதால் சற்று சிறப்பு..

அதே சமயம் சுற்றிலும் பனிமலைகளுக்கு நடுவே இருப்பதும் அழகாக இருந்தது.. இதுவும் உயரமான இடத்தில் இருக்கும் ஏரி.. ( 12,500 அடி உயரம் )

இங்கே ஒரு மணி நேரம் சுற்றினோம்.. பின்னர் மீண்டும் பனிமலைகளின் வழியாக தொடர்ந்து பயணம்..

இது north sikkim போல் இல்லாமல் இவ்விடம் சற்று வேறு மாதிரியானமரங்கள் ஏதும் இல்லாத பள்ளதாக்குகள் , ஏரிகள் ஆங்காங்கே இருந்ததால் மீண்டும் மலை பயணம் அலுப்பு தட்டவில்லை..

பனிக்கட்டிகள் இந்த பகுதியில் அதிகம் இருந்தன..ஆங்காங்கே நிறுத்தி பலரும் விளையாடுகின்றனர்..
















அடுத்து நாங்கள் நாதுல்லா pass அருகில் இருக்கும் வழியாக சென்றோம்.. 

நாங்கள் சென்றது திங்கள் கிழமை என்பதால் Nathulla Pass ற்கு  விடுமுறை (திங்கள் மற்றும் செவ்வாய்)..

அதனால் அங்கே செல்லாமல் நேராக zuluk ற்கு பயணத்தை தொடர்ந்தோம்..

நாதுல்லா பாஸ் என்பது இந்தியாசைனா பார்டர் கேட் ஆகும்.. இங்கே இரு நாட்டு எல்லை படையினரையும் காணலாம்... 

சீனா போருக்கு பிறகு 2006ல் இவ்விடம் எல்லை வணிகத்திற்காக திற்ந்திருக்கின்றார்கள்.. இப்பொழுது இது சுற்றுலா இடமாக உருவெடுத்துள்ளது.. 



செல்லும் வழியில்  அதிகம் இருந்தது ராணுவத்தினர் தான் ...  

பனிமலைகளிடையே வீரர்கள் rocket launcher , பீரங்கி போன்றவற்றை பயன்படுத்தி training எடுத்துக்கொண்டிருப்பதை கண்டோம்..








































வழியில் baba  mandir என்கிற இடத்திற்கு சென்றோம்.. 

இது போரில் மரணமடைந்த வீரர் பாபா ஹர்பஜன் நினைவாக அங்கே மண்டபம் கட்டியுள்ளார்கள்.. பல வீரர்கள் இங்கே வந்து சல்யூட் அடித்து வணங்கி செல்கின்றனர்..










வழியில் போர் வீரர்களின் நினைவு மண்டபமும் பார்த்தோம்..









பின்னர் kupup மிலிட்டரி செக்போஸ்ட் ) என்ற இடத்த்தில் நிறுத்தினோம்.. 

அங்கே elephant lake என்ற இடத்தை பார்த்தோம்..இந்த ஏரி யானை மாதிரி தோற்றமளிப்பதால் இந்த பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.. இந்த இடம் tourist கள் அதிகம் இல்லாமல் இருந்தது..




மீண்டும் பயணம் , பின்னர் மதியம் 2 -3 மனி அளவில zuluk வந்தடைந்தோம்..




ZULUK : 


இடம் gangtok லிருந்து கிட்டதட்ட 90 கி.மீ வருகின்றது.. ரோடுகளும் நன்றாக இருந்ததால் பயணமும் அலுப்பாக இல்லை.. இந்த இடத்திற்கு சிலிகுரியிலிருந்தும் வேறு வழியில் வரலாம்..

10,000 அடிகளுக்கு மேல் அமைந்திருக்கின்ற இந்த கிராமத்தை சுற்றிலும் மலைகள் , நடுவே மட்டும் ஒரு அழகான பள்ளதாக்கு.. இங்கேயும் மிலிட்டரி deployment உள்ளது..


இங்கே 20-30 குடும்பங்கள் வசிக்கின்றனர்.. பெரும்பாலானோர் அங்கிருக்கும் மிலிட்டரிக்கு சாலை அமைத்துக்கொடுக்கும் பனியாளர்களாக வாழ்க்கையை நடத்துகின்றனர்.. 

இப்பொழுது இந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலா தளமாக வளர்ந்து வருகிறது..




Thambi View Point : 


இங்கே இருக்கும் zig zag ரோடு ( thambi view point ) பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.. இது பனிகாலங்களில் ரோடுகள் முழுக்க பனியுடன் மலை மேலிருந்து பார்ப்பதற்கு மேலும் அழகாக இருப்பதாக கூறினார்கள்.. 

மாலை முழுவதும் அங்கேயே நடந்து சென்று அங்கிருக்கும் கிராமத்தை சுற்றினோம்..  

அருகிலேயே  பூட்டன் மலைகள் ..

இந்த இடம் இருக்கின்ற பாதை ,  பண்டையவரலாற்று சிறப்புமிக்கபாதையான silk route ல் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்.. 

60-70 வருடங்களுக்கு முன்பு பெங்காலின் kalimpong என்ற இடத்தில் இருந்து திபெத்தின் முக்கிய நகரமான lhasa என்ற இடம் வரையில் courier ஆக ஒரு சிலர் நடந்தே சென்று சேவை செய்து வந்துள்ளனர்..  அவர்கள் அங்கே செல்ல 15 நாடக்ளுக்கும் மேல் ஆகும் என்பதால் வழியில் இந்த இடத்தை (zuluk ) ஒரு ஓய்வு இடமாக பயன்படுத்தியிருக்கின்றார்கள்.. நாளடைவில் அங்கே ஒரு குட்டி கிராமமாக உருவெடுத்திருக்கின்றது.. 

இங்கே தங்குவதெற்கென்று ஹோட்டல்கள் ஏதும் கிடையாது.. ஆங்காங்கே இருக்கும் வீடுகளில் ஒரு சிலர் home stay ஆக தங்கவைக்கின்றனர்.. மாலை நேரமாகிவிட்டால் gangtok  திரும்ப பெர்மிட் கிடையாது என்பதால் அங்கேயே ஒரு வீட்டில் travel agent  உதவியுடன் தங்கினோம்.. 





இரவு நன்றாக குளிர் அடித்தது.. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு குளிரும் என்று.. 



















ZULUK : 































இங்கிருந்து உலகின் மூன்றாவது பெரிய மலையான kannjenchanga மலைகளை சற்று தெளிவாக காணலாம்.. அந்த மலைகளினிடையே sun rise / sunset  இங்கே பிரபலம்..







இந்த ஊருக்கு வருகின்ற வழியேலேயே பல சுற்றுலா இடங்களை ( nathang valley , thambi view point , kupup , highest golf course , kanjenjanga sunrise point ) பார்த்து விட்டதால் ,அடுத்த நாள் காலையில் மீண்டும் அதே வழியில் நாதுல்லா வழியாக gangtok ற்கு மீண்டும் திரும்பினோம்..




மதியம் gangtok ற்கு வந்தடைந்தோம்..

பின்னர் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த பிறகு 3கி.மீ. தூரத்தில் இருக்கும் enchy monastry என்கிற புத்த மடாலாயத்திற்கு நடந்தே சென்றோம்.. 

நடக்க நடக்கவே தெரிந்தது அது சற்று தூரம் என்று.. 

இந்த இடத்தில் பெரிதாக பார்ப்பதற்கு சிறப்பு என்று ஏதும் இல்லை.. சின்ன monastry தான்..

















ஆனால் போகின்ற வழியில் பாதைகள் எல்லாம் அழகாக இருந்தது.. 

இரவு மீண்டும் கேங்டாக்கை ஒரு ரவுண்ட் சுற்றினோம்.. பின்னர் ரெஸ்ட்..




அடுத்த நாள் காலையில் சிக்கிம் பயணத்தை முடித்துக்கொண்டுமாலை கொல்கத்தா செல்லும் ட்ரெயினை பிடிக்க new jalpaiguri க்கு நீங்கா நினைவுகளுடன் சிக்கிமை விட்டு கிளம்பினோம்..














வரும் வழியில் melli என்ற இடத்தில் river rafting இருப்பதை பார்த்தோம்.. 

ட்ரைவரும் எந்த ரிஸ்க்ம் இல்லை என்று ஆசையை தூண்டவே ,எங்களுக்கும் பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது.. ஆனால் நேரம் குறைவாக இருந்ததால் ரிஸ்க் எடுக்காமால் நேராக new ஜல்பைகுரிக்கு ரயிலை பிடிக்க வந்தடைந்தோம்.. 

இவ்வாறாக எங்கள் பயணத்தை நிறைவு செய்தோம்..


சிக்கிம் பயணம் கண்டிப்பாக மறக்க முடியாத அனுபவமாக அமைந்து என்றால் அது மிகையாகாது.. 

ஒரு அருமையான landscape இட்த்தை பார்க்க விரும்புகிறவர்கள் செல்ல வேண்டிய இடம் சிக்கிம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.. 


இதில் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் முழுவதும் Canon 6d and Fuji pocket கேமராவில் எடுக்கப்பட்டது.. 

மேலும் பல படங்கள் எங்கேயும் நிறுத்தி எடுக்க முடியாது காரில் செல்லும் போதே எடுக்கப்பட்டதால் சற்று shake தெரிவதற்கான காரணம்..


நன்றி 
சுரேஷ் பாபு

























3 comments:

  1. மாப்ள நானே நேரில் சென்றது போல் இருந்தது.
    கட்டுரையும் புகை படங்களும் மிக நேர்த்தியாக இருந்தது.
    தொடரட்டும் பயணங்கள்.

    ReplyDelete
  2. wow really excellent.. got an real traveled experience..!!

    ReplyDelete