Sunday, December 21, 2014

கடலோர கவிதைகள்..





வணக்கம் நண்பர்களே,

இதற்கு முன் `சாளுக்கிய வம்சம்` பயணம் பற்றி பார்த்தோம்..

இந்த இடத்திற்கு செல்லும் முன் நாங்கள் இருவரும் ஈரோட்டிலிருந்து கேரளா,கர்நாடகா,கோவா கடற்கரை வழியாக செல்வதென்று முடிவெடுத்தோம்..

அதன்படி முதலில் ஈரோட்டிலிருந்து கோவை வழியாக பாலக்காடு,கோழிக்கோடு வழியாக முடிந்தளவு  கன்னூர் வரை செல்ல திட்டமிட்டோம்..

பாலக்காடு தாண்டியதுமே கேரளாவின் மலையும் மலை சார்ந்த இடம் ஆரம்பித்ததும் ஒரே மகிழ்ச்சியானோம்.. ஆனால் போக போக ரோடு மோசமாகி கொண்டே இருந்தது வண்டி ஓட்டுவது சிரமத்தை கொடுத்தது.. பெரிய ஊர்கள் கூட அங்கே பசுமையாக இருந்தது அழகு..


கோழிக்கோடு:








கோழிக்கோடு - கன்னூர் வழி:






கடைசியில் தலச்சேரியை வரையே செல்ல முடிந்தது..இரவு அங்கேயே தங்கி விட்டோம்..



முழப்பிலங்காடு பீச்:


காலையில் அங்கிருந்து கண்ணூர் செல்லும் வழியில் `முழப்பிலங்காடு பீச்` என்ற இடத்திற்கு சென்றோம்.. இந்த பீச்சின் ஓரம் கிட்டதட்ட 20கி.மீ. கன்னூர் வரையில் கடற்கரையிலேயே  நாமே வண்டிகளை ஓட்டிச்செல்லலாம் என்பது இந்த பீச்சின் சிறப்பு..














முதலில் கடற்கரை வழியாகவே செல்லலாம் என்று முடிவெடுத்து கிளம்பினோம்.. சிறிது தூரம் சென்றதும் எங்களுக்கு முன்னர் சென்ற ஒரு கார் பீச் மணலில் சிக்கியிருப்பதை பார்த்ததும் எதற்கு வம்பு என்று பேசாமல் ரோடு வழியில் சென்றோம்..

கொஞ்ச நேரத்திற்கு இந்த கடற்கரை நன்றாக இருந்தது, பின்னர் பழகியதும் பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை.. ஆனால் , இந்த வழியாக செல்வோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பீச்.. ஒரு தடவை செல்லலாம்..

அடுத்து கன்னூர் தாண்டிய பின்  `வழியபரம்பு` என்ற செயற்கை தீவு ஒன்று இருப்பதாக சொன்னதை கேட்டு தேடி சென்றோம்.. விடுமுறை நாள் என்பதால் போகிற வழியில்  கேரளா மக்கள் பெரும்பாலானோர் சிறு ஆற்றில் பாலங்களின் மேல் ஏறி குதித்து விடுமுறையை கொன்டாடிக்கொண்டிருந்தனர்..
















வழியபரம்பு தீவு:








ஆனால் விளம்பரம் செய்யப்பட்ட அளவிற்கு இந்த தீவு ஒன்றும் பெரிதாக இல்லை.. கடலோர backwater தேக்கத்தின் குறுக்கே ஒரு பாலம் மாதிரி போட்டு ஒரு குட்டி (ரொம்ப குட்டி) தீவு மாதிரி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்..





மற்றபடி தேடி போய் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை..

ஆனால் இதை தேடி நாங்கள் சென்ற பாதை யாவும் கிராமம் கிராமமாக இருந்ததால் போகின்ற வழி அனைத்தும் கேரளாவின் கடலோர கிராம அழகை கண்டோம்..



பேகல் கோட்டை (BEKAL FORT):

பின்னர் அங்கிருந்து போகிற வழியில் காசர்கோடு கடற்கரை ,அருகே பேகல்(bekal fort) கோட்டைக்கு சென்றோம்..












பம்பாய் படத்தில் வரும் `உயிரே உயிரே` பாடல் தலம் பெற்ற இடம் தான் இந்த பேகல் கோட்டை..

 நாங்கள் சென்ற நேரம் மாலை ஆகிவிட்டதால் வெயில் இறங்கிக்கொண்டிருந்தால் கடற்கரை அருகே கண் நன்றாக கூசியது.. சிறிது நேரம் அங்கே சுற்றி பார்த்து விட்டு சீக்கிரம் மங்களூர் இருட்டிற்குள் தாண்ட வேண்டும் என்று வண்டியை எடுத்தோம்..


 கர்நாடகா:

ஒரு வழியாக கேரளாவின் மோசமான ரோடுகளை தாண்டி கர்நாடகாவை தொட்டோம்.. இங்கிருந்து ரோடுகள் நன்றாக இருந்தது..

மங்களூருக்கு சற்று  நேரமே வந்து விட்டதால், மேலும் பயணம் செய்ய நேரம் இருந்ததால், உடுப்பி வரை செல்ல தீர்மானித்தோம்.. இரவு 10 மணி அளவில் உடுப்பி வந்தடைந்தோம்..

அங்கேயே தங்கி,காலையில் கிருஷ்ணர் கோவில் செல்ல முடிவெடுத்தோம்..


உடுப்பி:





காலையில் நாங்கள் தங்கிய விடுதிக்கு அருகேயே கிருஷ்ணர் கோவில் இருந்ததால் அங்கே நடந்து சென்றோம்..நான் சிறு வயதில் அனேகமாக 1987 ல் சென்ற ஞாபகம் கொஞ்சம் கொஞ்சம் நினைவுகளை கிளறியது.. கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டு கோவாவை தொட்டு விட வேண்டும் என்ற முனைப்புடன் கிளம்பினோம்..


கொல்லூர் மூகாம்பிகை கோவில்:

போகிற வழியில் தான் கொல்லூர் மூகாம்பிகை கோவில் இருந்ததால் அங்கேயும் சென்று விட முடிவெடுத்து கிளம்பினோம்..ரோடும் நன்றாக் இருந்ததால் ட்ரைவிங்கும் நன்றாக இருந்தது..






மூகாம்பிகை கோவிலுக்கு சென்று தரிசித்துவிட்டு மதிய உணவு கோவிலில் சாப்பிட்டோம்.. சாப்பாடு உண்மையில் மிக அருமை..குறிப்பாக ரசம் சூப்பரோ சூப்பர்.. கோவிலுக்கு செல்வோர்கள் கண்டிப்பாக உணவருந்தாமல் வரவேண்டாம்..

இங்கே போட்டோ எடுக்க கூடாது என்பதால் படம் எடுக்க முடியவில்லை..

மூகாம்பிகை - முருதேஷ்வரர் செல்லும் வழி:


இங்கிருந்து மங்களூர் செல்லும் வழியில் `மரவந்தி` என்ற பீச் இருப்பதாக கூறினார்கள்..இதன் சிறப்பு என்னவென்றால், ரோட்டின் ஒரு பக்கம் கடலும் மறுபக்கம் ஆறும் ஒரு சேர இருக்கும்.. ஆனால் நேரம் போதாமையால் அங்கே செல்ல முடியவில்லை..

எனவே,மீண்டும் காட்டு வழியே தான் செல்ல வேண்டும் என்பதால் அங்கே இருந்த கிராமங்கள் வழியாகவே `முருதேஷ்வரர்` கோவிலுக்கு கிளம்பினோம்..









முருதேஷ்வரர் கோவில்:

கடற்கரை ஓரம் அமைந்திருக்கின்ற `முருதேஷ்வரர்` கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தோம்.. தூரத்தில் இருந்தே கோவில் கோபுரம் பெரிதாக தெரிந்தது கண்டு கொஞ்சம் excite ஆனோம்.. ஆனால்,























முருதேஷ்வரர் கோவில் கடற்கரையிலே கட்டியிருக்கின்றார்கள்.. இங்கே மிகப்பெரிய சிவன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.. அதே சமயம் கோபுரமும் சற்று பெரிதாக கட்டியிருக்கிறார்கள்..

ஆனால் பராமரிப்பு மிகவும் மோசமாக இருந்தது.. குறிப்பாக கோபுரம் முழுக்க சிமெண்ட்டிலேயே கட்டியிருக்கிறார்கள்.இதனாலேயே கோபுரம் அங்கங்கே பழுதாகி இருந்தது.. அதில் நாம் மேலே சென்று பார்ப்பதற்காக லிப்ட் வசதியும் அமைத்திருக்கிறார்கள்.. ஆனால் கோபுரம் முழுக்க சிமென்ட் என்பதால் பழுதடைந்து கொண்டே இருக்கின்றது.. லிப்டில் மேலே சென்று பார்ப்பதற்கு வேண்டுமானால் கொஞ்சம் நன்றாக இருந்தது..ஆனால் மாலை வெயில் அதிகமாக இருந்ததால் பெரிதாக ரசிக்க முடியவில்லை..

இதன் பிரம்மாண்டத்தை போட்டோவில் பார்த்த அளவு நேரில் ஈர்க்கவில்லை.. ஒரு தடவை போகிற வழியில் இருப்பதால் வேண்டுமானால் சென்று பார்க்கலாம்.. மற்றபடி இதற்காக மட்டும் போகத் தேவையில்லை என்பது எனது கருத்து..

கார்வார் (KARWAR):


பின்பு அருகில் உள்ள `கோகர்னா` பீச் செல்ல முடிவெடுத்தோம், நேரம் ரொம்பவும் ஆகிவிட்டதால் அங்கே செல்ல முடியாமல் நேராக கர்நாடகா - கோவா பார்டரான கார்வார்(karwar) சென்றடைந்தோம்..போகிற வழிகளில் ரோடுகள் வேலையாகி கொண்டிருந்ததால் மெதுவாகவே சென்றோம்..
அங்கங்கே இருந்த சிறு ஆறுகள் எல்லாம் அழகு..

 இரவில் கார்வாரில் தங்கினோம்..










இந்த ஊர் கோவா பார்டர் என்பதால் டூரிஸ்ட்டுகளும் அதிகமாக இருந்தனர்..

காலையில் அருகில் இருந்த பீச்சிற்கு சென்றோம் , கொன்சம் நன்றாக இருந்தது.. அதே சமயம் ரொம்பவும் plain ஆக இல்லாமல் மலைகள் சுற்றி இருந்தது சற்று அழகாக இருந்தது..

இதன் அருகில் இரண்டு குட்டி தீவுகள் இருப்பதாக கேள்விபட்டிருந்தோம்..ஆனால் கடற்கரைகள் எங்களுக்கு சற்று போரடிக்க ஆரம்பித்ததால், நேரமும் ஆகிவிட்டதால் கோவா சென்றடைவதற்காக வண்டியை கிளப்பி கோவா சென்றோம்..












கோவா பற்றி மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம்..

அன்புடன்
சுரேஷ் பாபு, 
சரவணமூர்த்தி..
























































































No comments:

Post a Comment